செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

மகளிர் கிரிக்கெட்டில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் போட்செஃப்ஸ்ட்ரோமில் சனிக்கிழமை நடைபெறுகிறது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 2 மடங்கு அதிகரிக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் பெங்களூரு எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வென்றது.

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தகுதிச்சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

ஆஸ்திரேலிய ஈட்டி எறிதல் வீரரும், அந்நாட்டின் தேசிய சாதனையாளருமான ஜெரோட் பேனிஸ்டர் (33) வெள்ளிக்கிழமை திடீரென காலமானார்.

சோஃபியா ஏடிபி காலிறுதி டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 4-6, 6-2, 6-3 என்ற செட்களில் ஸ்லோவேகியாவின் மார்டின் கிளிஸானை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய குத்துச்சண்டை வீரரான அகில் குமார் தனது 2-ஆவது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தான்ஸானியாவின் சாடிகி மோம்பாவை சனிக்கிழமை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT