செய்திகள்

ஐசிசி தரவரிசை: 900 புள்ளிகளைக் கடந்து விராட் கோலி புதிய சாதனை!

1993 மார்ச் 26-ல் பிரையன் லாரா 908 புள்ளிகள் எடுத்தார். 24 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில்...

DIN

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் (844) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (823) 3-வது இடத்திலும் உள்ளார்கள். பாபர் அஸம், ஜோ ரூட் ஆகியோர் 4,5-ம் இடங்களில் உள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் விராட் கோலி 558 ரன்கள் எடுத்தார். 112, 46*, 160*, 75, 36, 129*. 

இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். முன்னதாக, சகநாட்டவரான ரோஹித் சர்மா கடந்த 2013-14 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 491 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

இதையடுத்து ஐசிசி தரவரிசையில் 909 புள்ளிகளை அடைந்து கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 1993 மார்ச் 26-ல் பிரையன் லாரா 908 புள்ளிகள் எடுத்தார். 24 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் லாராவின் புள்ளிகளைக் கடந்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விவியன் ரிச்சர்ட்ஸ். 1985-ம் ஆண்டு 935 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாகும். இந்தப் பட்டியலில் 909 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளார் கோலி. அடுத்த இடத்தில் லாரா உள்ளார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சச்சின் அதிகபட்சமாக 1998-ல் 887 புள்ளிகள் பெற்றார்.

மேலும் டிவில்லியர்ஸுக்குப் பிறகு ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் என்கிற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசை

                  வீரர் புள்ளிகள் வருடம்
 விவியன் ரிச்சர்ட்ஸ் 935 1985
 ஜாகீர் அப்பாஸ் 931  1983
 கிரேக் சேப்பல் 921 1981
 டேவிட் கோவர்  919  1983
 டீன் ஜோன்ஸ் 918 1991
 ஜாவத் மியாண்டட் 910 1987
 விராட் கோலி 909 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

SCROLL FOR NEXT