முகப்பு
செய்திகள்

முத்தரப்பு டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

ஆக்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ஆக்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. டெய்லர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். அகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆஸ்திரேலிய அணி பிரமாதமாக விளையாடி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஆட்ட நேரம் கடந்ததால் டிஎல்எஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றதாக நடுவர்கள் அறிவித்தார்கள்.

ஆஸி. தொடக்க வீரர் ஷார்ட் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 20, ஃபிஞ்ச் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இதனால் முத்தரப்பு டி20 போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆட்ட நாயகன் விருதை அஸ்டன் அகரும் தொடர் நாயகன் விருதை க்ளென் மேக்ஸ்வெல்லும் வென்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.