செய்திகள்

குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்

DIN

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலமாக அவர் சர்வதேச களத்தில் தொடர்ச்சியாக 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக மேரி கோம் தனது காலிறுதியில் ருமேனியாவின் ஸ்டெலுடா தத்தாவை வீழ்த்தினார். 
இதனிடையே, ஆடவருக்கான 64 கிலோ பிரிவில் போட்டியிட்ட இந்தியரான தீரஜ் ரங்கி தனது முதல் சுற்றில், மோரிஷஸின் லூயிஸ் காலின் ரிகார்னோவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இப்போட்டியில் இதுவரை, சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்), சவீதி பூரா (75 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
இதில் சவீதி பூரா மற்றும் மீனா குமாரி தேவி ஆகியோர் காலிறுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், சீமா பூனியா மற்றும் பாக்யவதி ஆகியோர் 'பை' வாய்ப்பு மூலமாக அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT