செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார் தெ.ஆ. வீரர் மோர்னே மோர்கெல்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

எழில்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது சவாலாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளேன். அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியத் தொடரில் வெற்றி பெற முனைப்புடன் போராடுவேன் என்று கூறியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்தாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மோர்னே மோர்கெல் கூறியுள்ளார். 

மோர்னே மோர்கெல் இதுவரை 83 டெஸ்டுகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 1 அன்று ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடர் நான்காவது டெஸ்டுடன் ஏப்ரல் 3 அன்று நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT