விஜய் ஹஸாரே கோப்பை: மயங்க் அகர்வால் மீண்டும் அசத்தல் பேட்டிங்!
இந்த சீசன் முழுக்க அதிரடியாக விளையாடி வரும் மயங்க் அகர்வால் இன்றும் பிரமாதமாக விளையாடி...
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம்-செளராஷ்டிரம் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.
செளராஷ்டிரம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கர்நாடக அணி 45.5 ஓவர்களில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சீசன் முழுக்க அதிரடியாக விளையாடி வரும் மயங்க் அகர்வால் இன்றும் பிரமாதமாக விளையாடி 79 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்தார்.
சமர்த் 48, தேஷ்பாண்டே 49 ரன்கள் எடுத்தார்கள். செளராஷ்டிர அணியின் மக்வானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.