முகப்பு
செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 2-வது வெற்றி!

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா 21.5 ஓவர்களில் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த இலக்கை 8 ஓவர்களில் அடைந்தது இந்திய அணி. கேப்டன் பிருத்வி ஷா 57 ரன்களும் கல்ரா 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.