7 ஆண்டுகளில் முதல் முறை! முதல் போட்டியில் அரை சதம் விளாசத் தவறிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசத் தவறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசத் தவறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியிலேயே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் அதிரடியாக ரன்கள் குவிக்கத் தவறினார்.
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடரில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் விளையாடும் முதல் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். ஆனால், இந்த சீசனில் அவரது முதல் போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அவர் விளையாடிய முதல் போட்டியில் எடுத்த ரன்கள் விவரம் பின்வருமாறு,
74 (32) - சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக, 2020
119 (63) - பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, 2021
55 (27) - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2022
55 (32) - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2023
82* (52) - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக, 2024
66 (37) - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2025
6 (7) - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, 2026
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்க சஞ்சு சாம்சன் உதவியது குறிப்பிடத்தக்கது.
For the first time in the last seven years of the IPL, Sanju Samson has failed to score a half-century in the opening match.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.