செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள்ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணிக்கு எதிரான 5 ஒரு நாள் ஆட்டங்களைக் கொண்ட தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்திலும் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து 45.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 81 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான ஃபக்தர் சமான் 54 ரன்களும் எடுத்தனர். அதற்கு அடுத்தபடியாக, ஹாரிஸ் சோஹைல் (50 ரன்கள்), கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது (51 ரன்கள்) எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் சௌதி 8 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளையும், கேப்டன் கேன் வில்லியம்சன் 10 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
நியூஸிலாந்து தரப்பில், ஆல்-ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் (74 ரன்கள்) காலின் மன்றோ (56 ரன்கள்), ஹென்றி நிகோல்ஸ் (52 ரன்கள்) எடுத்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஷதாப் கான் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் ஆட்டம், வெல்லிங்டனில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT