இந்தோனேஷிய மாஸ்டர்ஸ்: பி.வி. சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவால் அரையிறுதிக்குத் தகுதி!
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில் பி.வி. சிந்துவும் சாய்னாவும் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் 21-13, 21-19 என நேர் செட்களில் வெற்றியடைந்தார் சாய்னா நெவால். சர்வதேச அளவில் இருவரும் இதுவரை மூன்றுமுறை போட்டியிட்டுள்ளார்கள். அதில் 2 போட்டிகளில் வென்று சாய்னா முன்னணியில் உள்ளார்.
அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனனை எதிர்கொள்கிறார்.