முகப்பு
இந்தியா

பிகார், உ.பி.யிலிருந்து வாக்காளர்கள் வரவழைப்பு: பாஜக மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்க தேர்தலில் பாஜக, தேர்தல் ஆணையம் மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Updated On : 31 மார்ச், 2026 at 4:13 PM
கொல்கத்தாவில் பாஜக ஆதரவாளர்கள் - PTI
பகிர்:

மேற்கு வங்க தேர்தலில் அம்மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களிலிருந்து வாக்காளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தியது.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்பிதா கோஷை ஆதரித்து பலூர்காட் டவுன் கிளப் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி, “வங்கத்தின் குடித்தரவியலை மாற்ற ஒரு சதி தீட்டப்படுகிறது. வங்க மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்த விடாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வங்கத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் வாக்காளர்கள் வரவழைக்கப்படுகின்றனர்” என்றார்.

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், அதே குற்றச்சாட்டை அபிஷேக் பானர்ஜியும் சுமத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

summary

BJP trying to alter Bengal's demography by importing voters from outside: Abhishek

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.