பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
பாஜக மீது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் விமர்சனம்...
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23, 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
பங்குரா, பச்சிம் மேதினிப்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
"பாஜக ஒரு காட்டுமிராண்டித்தனமான கட்சி. நாடு முழுவதும் வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்தோரை குறிவைத்துத் தாக்குகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தவறாக நடத்தப்படுகின்றனர்.
294 தொகுதிகளிலும் என்னை உங்கள் வேட்பாளராகக் கருதி வெற்றி பெறச் செய்யுங்கள். வங்க மக்களுக்கு தொடர்ந்து இந்த அரசு துணை நிற்கும்" என்று பேசினார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள மக்கள், மீன் மற்றும் இறைச்சி உண்பதைத் தடுத்துவிடுவார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களைச் சேர்க்க பாஜகவினர் முயற்சித்து வருவதனாகவும் இதற்கு தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படுவதாகவும் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.