செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி, கோடீஸ்வரர்களாகியுள்ள யு-19 வீரர்கள்!

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் 9 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள்...

எழில்

என்னதான் இந்திய அணிக்காக யு-19 உலகக் கோப்பையில் விளையாடினாலும் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக அமையும் எனச் சொல்லிவிடமுடியாது. யு-19 உலகக் கோப்பையில் விளையாடியும் அப்படியே சுவடு தெரியாமல் போன வீரர்கள் பலர் உள்ளார்கள்.

ஆனால் ஐபிஎல் போட்டியால் அத்தகைய கவலை இனி இருக்காது. இந்தமுறை ஏராளமான யு-19 வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் 9 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். இதில் 5 வீரர்கள் கோடீஸ்வரர்களாகவுள்ளார்கள். அதிலும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான 16 வயது முஜீப்பை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. இந்திய வேகப்பந்து வீச்சாளர் நாகர்கோடியை ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது கொல்கத்தா. உலகக் கோப்பையில் பங்கேற்பு, ஐபிஎல் ஏலத்தில் கோடிக்கணக்கான சம்பளம் என வளமான எதிர்காலம் இந்த வீரர்களுக்கு சாத்தியமாகியுள்ளது.

கமலேஷ் நாகர்கோடி

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இந்திய யு-19 வீரர்கள்

கமலேஷ் நாகர்கோடி - கொல்கத்தா - ரூ. 3.20 கோடி
ஷிவம் மவி - கொல்கத்தா - ரூ. 3 கோடி
ஷுப்மன் கில் - கொல்கத்தா -  ரூ. 1.80 கோடி
பிருத்வி ஷா - தில்லி - ரூ. 1.20 கோடி
அபிஷேக் சர்மா - தில்லி - ரூ. 55 லட்சம்
மன்ஜோத் கல்ரா - தில்லி - ரூ. 20 லட்சம்
அனுகுல் ராய் - மும்பை - ரூ. 20 லட்சம் 

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இதர நாட்டு யு-19 வீரர்கள்

முஜீப் ஜத்ரான் (ஆப்கானிஸ்தான்) - பஞ்சாப் - ரூ. 4 கோடி
ஜாகிர் கான் (ஆப்கானிஸ்தான்) - ராஜஸ்தான் - ரூ. 60 லட்சம்

முஜீப் ஜத்ரான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT