முகப்பு
செய்திகள்

2020-ல் டி20 உலகக் கோப்பை: மெல்போர்னில் இறுதிப் போட்டி!

மகளிர் போட்டியில் 10 அணிகளும் ஆடவர் போட்டியில் 16 அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:07 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடிலெய்ட், பிரிஸ்பேன், கேன்பெரா, ஜீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய 8 நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையும் ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளன.

மகளிர் போட்டியில் 10 அணிகளும் ஆடவர் போட்டியில் 16 அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன. இரு பிரிவிலும் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.