முகப்பு
செய்திகள்

காயம் காரணமாக முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து டி வில்லியர்ஸ் விலகல்!

ஒருநாள் தொடரின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலிருந்து தென் ஆப்பிரிக்க நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:07 PM
பகிர்:

இது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்குமா? இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலிருந்து தென் ஆப்பிரிக்க நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

3-வது டெஸ்டில்,  விராட் கோலி அளித்த கேட்ச்சைப் பிடிக்க முயலும்போது அவருடைய வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் சரியாகக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் டி வில்லியர்ஸ் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 

டி வில்லியர்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் என யாரையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை. எனவே 14 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியே ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. எனினும் நான்காவது ஒருநாள் போட்டியிலிருந்து டி வில்லியர்ஸ் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. 

ஒருநாள் தொடர் நாளை முதல் டர்பனில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.