முகப்பு
செய்திகள்

ஒருநாள் தொடர்: பூம்ரா விலகல்! சிஎஸ்கே வீரர் இந்திய அணியில் சேர்ப்பு!

காயம் காரணமாக கடந்த புதன் அன்று பூம்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பூம்ரா தற்போது ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின் போது பூம்ராவுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார் பூம்ரா. இதனால் அவருக்குப் பதிலாக சிஎஸ்கே வீரரான ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த புதன் அன்று பூம்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து அவர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் பூம்ரா இடம்பெறுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments