பெல்ஜிய வீரர் ஹசார்டால் பிரான்ஸ் அணிக்கு சிக்கல்
பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பெல்ஜிய அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் சிறப்பாக ஆடி வருகிறார்
பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பெல்ஜிய அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் சிறப்பாக ஆடி வருகிறார். பிரான்ஸ் கால்பந்தில் லீகில் பல்வேறு கிளப் அணிகளுக்காக ஹசார்ட் விளையாடியுள்ளார். 14 வயது முதல் பிரான்ஸ் கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடி வரும் ஈடன் ஹசார்ட், இருமுறை லீக் சிறந்த வீரர் விருது வென்றார். மேலும் இரண்டு லீக் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். பெல்ஜிய அணிக்கு மோசமான தருணங்களில் சிறப்பாக ஆடி மீட்டுள்ளார். ஜப்பானுக்கு எதிராக 2-0 என பெல்ஜியம் பின்தங்கிய நேரத்தில் ஹசார்டின் சிறப்பான ஆட்டத்தில் 3-2 என வென்றது. அரையிறுதி ஆட்டத்தில் ஹசார்டின் ஆட்டம் பிரான்ஸுக்கு சிக்கலை உண்டாக்கும் எனத் தெரிகிறது.