செய்திகள்

ஒருநாள்: இங்கிலாந்து அணி அதிரடி தொடக்கம்!

ஜேஸன் ராய் 38 ரன்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்...

எழில்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. 

நாட்டிங்கமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். இதையடுத்து சித்தார்த் கெளல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார். மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். உமேஷ் யாதவ், சித்தார்த் கெளல், குல்தீப் யாதவ், சாஹல், பாண்டியா ஆகியோர் பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

பேட்டிங்கில் மிகவும் பலமாக உள்ள இங்கிலாந்து அணி, இன்றும் தனது பலத்தை நிரூபித்தது. முதல் ஓவரிலேயே இந்திய அணி பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எல்பிடபிள்யூ-வை நடுவர் தர மறுத்ததால் நல்ல வாய்ப்பு வீணானது. 

5 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி, 26 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு, தொடக்க வீரர்கள் ராயும் பேர்ஸ்டோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜேஸன் ராய் 38 ரன்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்கள், ஜோ ரூட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT