செய்திகள்

ஒருநாள் ஆட்டம்: இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்!

டி 20 தொடரைப் போலவே 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி..

தினமணி

முதல் ஒரு நாள் ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வென்றன. இதனால் ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடரை வெல்பவரை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் ஹெட்டிங்லியில் இன்று நடைபெற்று வருகிறது. டி 20 தொடரைப் போலவே 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் உமேஷ் யாதவ், சித்தார்த் கெளல், ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீப்பிடிக்குதே... ஆஞ்சல் முஞ்சால்!

திரிம்பகேஷ்வரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

தந்தை மறைந்த ஒரே நாளில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்த துனித் வெல்லாலகே!

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT