செய்திகள்

இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் 'ஆசியப் புலி'யாக மாறும்: ஷோயப் அக்தர்

பாகிஸ்தானை ஆசியப் புலியாக மாற்றும் திறமை இம்ரான் கானுக்கு உள்ளதாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

DIN

பாகிஸ்தானை ஆசியப் புலியாக மாற்றும் திறமை இம்ரான் கானுக்கு உள்ளதாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவாகி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கூறுகையில்,

பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்றால் அனைவரும் இம்ரான் கான் பக்கம் நிற்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தானை ஆசியப் புலியாக மாற்றும் திறமை அவருக்கு மட்டும் தான் உள்ளது.

பிடிஐ கட்சியினருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடைபெறும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT