இந்த வருட விஜய் ஹஸாரே போட்டியில் மயங்க் அகர்வால் எடுத்த ரன்கள்.
77, 109, 84, 28, 102, 89, 140, 81, 90.
41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற கர்நாடக அணி, விஜய் ஹஸாரே கோப்பையை வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
மயங்க் அகர்வால் குறித்து கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளே ட்விட்டரில் கூறியதாவது: தேசிய அணியில் இடம்பிடிக்க அதன் கதவைத் தட்ட வேண்டாம். உங்களுடைய பங்களிப்பினால் அதைத் திறக்க வைக்க வேண்டும். மயங்க் அகர்வால் அதைத்தான் செய்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.
எனினும் முத்தரப்பு டி20 தொடரில் மயங்க் அகர்வால் தேர்வாகவில்லை. இதைப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். எனினும் இந்திய பேட்ஸ்மேன்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மயங்க் அகர்வால் தேர்வாக வாய்ப்புண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.