செய்திகள்

ஐபிஎல் துவக்க விழா திடீர் மாற்றம்

ஐபிஎல் துவக்க விழாவை திடீரென மாற்றம் செய்து திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Raghavendran

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரை ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.

ஏப்ரல் 7-ந் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது. 

இந்நிலையில், ஐபிஎல் துவக்க விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற இருந்த 11-ஆவது சீசன் ஐபிஎல் துவக்க விழா, ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி நடைபெறவுள்ளது. பின்னர் சென்னை - மும்பை இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

SCROLL FOR NEXT