ஸ்டீவ் ஸ்மித்தை விமரிசித்து ட்வீட் செய்தது நானல்ல: தெ.ஆ. வீரர் பிளாண்டர் மறுப்பு!
என் சார்பாக யாரோ ஒருவர் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக எழுந்த சம்பவங்களுக்கு...
1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, உற்சாக வெறியில் ஸ்மித்தின் தோளில் மோதினார். அவரது இந்த நடவடிக்கை தொடர்பாக போட்டி நடுவர்கள் புகார் அளித்ததை அடுத்து, இத்தொடரின் எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிளாண்டர் ஸ்டீவ் ஸ்மித்தை விமரிசைத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டு அதன் தொடர்புடைய காணொளியையும் வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார். அதில் கூறியிருந்ததாவது:
ரபாடா பக்கமாக ஸ்மித் தான் தோள்பட்டையை முன்னே கொண்டுவந்துள்ளார். ரபாடாவுடனான மோதலை அவரால் தடுத்திருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் அவர்தான் குற்றவாளி. கால்பந்து விளையாட்டில் பெனால்டி கிடைப்பதற்காக செய்கிற வேலைகளைச் செய்ய முயற்சித்துள்ளாரா? நல்லவேளை அவர் கீழே விழ முயற்சி செய்யவில்லை என்று ட்வீட் செய்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பிளாண்டர் ட்வீட் செய்ததாவது: என் ட்விட்டர் ரசிகர்களுக்குக் காலை வணக்கம். இன்று காலை எழுந்தது முதல் ட்விட்டர் பிரச்னைகளுடன் போராடுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என் சார்பாக யாரோ ஒருவர் ஒரு கட்டுரையைப் பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக எழுந்த சம்பவங்களுக்கு அல்லது பொழுதுபோக்குக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நல்ல நாளாக அமைய வாழ்த்துகள் என்று ட்வீட் செய்து பிரச்னையை முடித்துள்ளார்.