செய்திகள்

மம்தா பானர்ஜியுடன் ஷமி மனைவி சந்திப்பு!

எழில்

முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஹசின் ஜஹான் கோரிக்கை விடுத்திருந்தார். அவரைச் சந்திக்கவும் அனுமதி கோரினார்.

இதையடுத்து மம்தா பானர்ஜியை இன்று சந்தித்தார் ஹசின் ஜஹான். இன்று மதியம் சட்டமன்றத்தில் மம்தாவைச் சந்தித்த ஹசின், 10 நிமிடங்கள் உரையாடியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசியு) மேற்கொண்ட விசாரணையின் முடிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசியு) மேற்கொண்ட விசாரணையின் முடிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT