செய்திகள்

ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை டெல்லி டேர்டெவில்ஸ் அணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீண்டும் பங்கேற்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மும்பையில் நடக்கிறது.

இதற்கான நேரடி டிக்கெட் விற்பனை வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் விற்பனையை டெல்லி டேர்டெவில்ஸ் அணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. ரூ.750 முதல் முதல் ரூ.17,500 வரையிலான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது.

இதுகுறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் ஹேமந்த் துவா கூறுகையில்,

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் கோட்லா மைதானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இங்கு அற்புதமான ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோன்று இந்த 2018-ம் ஆண்டும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். கோட்லா மைதானத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் ரசிகர்களை அன்புடன் வரவேற்கிறோம். அவர்களின் இதயத்துடிப்பில் என்றுமே டெல்லி இடம்பெற்றுள்ளது என்பதை வெளிக்காட்ட இது ஒரு சிறந்த சந்தர்பமாக இருக்கும் என்றார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஏப்ரல் 21-ந் தேதி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சந்திக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT