ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே மே 12-ஆம் தேதி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தது. அதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் அன்றைய தினம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த ஆட்டம் தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7-ஆம் தேதி ஐபிஎல் விழா தொடங்கவுள்ளது. அந்த மாதம் 21-ஆம் தேதி இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.