செய்திகள்

ஒரே சமயத்தில் இரு பெண்களைத் திருமணம் செய்கிறேனா?: பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ மறுப்பு!

தன்னுடைய இரு காதலிகளை ஒரே சமயத்தில் திருமணம் செய்யவுள்ளார் என்றொரு செய்தி சமீபத்தில்...

எழில்

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ தன்னுடைய இரு காதலிகளை ஒரே சமயத்தில் திருமணம் செய்யவுள்ளார் என்றொரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் ரொனால்டினோ.

பிரிஸ்சில்லா கொயல்ஹோ, பியாட்ரிஷ் சோஸா என இருவரைக் காதலித்து வருகிறார் ரொனால்டினோ. 2016 டிசம்பர் முதல் இருவரும் ரொனால்டினோவுடன் இணைந்து வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. 2016 முதல் பியாட்ரிஷைக் காதலித்து வருகிறார் ரொனால்டினோ. அதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்து பிரிஸ்சில்லா அவருடைய காதலியாக இருந்து வருகிறார். இரண்டாவது காதலி கிடைத்தபிறகும் முதல் காதலியை அவர் கைவிடவில்லை. செலவுகளுக்குப் பணம் அளிப்பதில் ஆரம்பித்து பரிசுகள் அளிப்பது வரை ஒரே மாதிரியாகப் பாகுபாடு இன்றி இருவரையும் அவர் கவனித்துக்கொள்வதாகவும் சர்வதேச ஊடகங்களில் ரொனால்டினோவின் காதல் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ரொனால்டினோவின் இரு காதலிகளும் பிரேஸிலின் பெலோ ஹொரிஸோண்டே பகுதியைச் சேர்ந்தவர்கள்.  

இந்நிலையில், தன்னுடைய இரு காதலிகளையும் ரொனால்டினோ, ஆகஸ்ட் மாதம் ரியோவில் திருமணம் செய்யவுள்ளார் என்றொரு செய்தி ஊடகங்களில் வெளியாயின. இதையடுத்து மூவரும் இணைந்த புகைப்படங்களும் ரொனால்டினோவின் காதலிகளின் புகைப்படங்களும் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகி அதிகக் கவனத்தைப் பெற்றன. இதுவரை தன்னுடைய காதலிகள் குறித்து ரொனால்டினோ வெளிப்படையாகப் பேசியதில்லை. எனினும் தன்னைப் பற்றிய செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

உலகமே என்னை அழைத்து விளக்கம் கேட்கிறது. நான் இப்போதைக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2002-ஆம் ஆண்டு பிரேஸில் அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ரொனால்டினோ, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன், பார்சிலோனா ஆகிய கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். எனினும், கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் ஓய்வு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியாட்ரிஷ் சோஸா
பிரிஸ்சில்லா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT