செய்திகள்

இலங்கை-இந்தியா 2017 டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக அல்ஜசீரா தகவல்

தினமணி

கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கை காலே நகரில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்தது என அல்ஜசீரா தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 கத்தாரைச் சேர்ந்த அந்த தொலைக்காட்சி மேற்கொண்ட ஸ்டிங் ஆப்ரேஷன் எனப்படும் ரகசிய செய்தி சேகரிப்பில் மேட்ச் பிக்சிங் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2017 நவம்பர் மாதம் நடந்த இலங்கை-இந்தியா டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் ஆடுகளத்தை சாதகமாக மாற்றி அமைக்க ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு எதிரிகள் பணம் வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பான முழு விவரம் அல்ஜசீராவில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஐசிசி விசாரணை: அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட பரபரப்பான தகவலை அடுத்து இந்த புகார் தொடர்பாக உடனடி விசாரணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழல் தடுப்பு குழுவினரும், அந்தந்த நாட்டு வாரிய அதிகாரிகளும் விசாரணையில் பங்கேற்றுள்ளனர்.
 இந்தியாவைச் சேர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், துபாயைச் சேர்ந்த இந்திய வணிகர் கெளரவ் ராஜ்குமார், காலே மைதான உதவி மேலாளர் தரங்கா இன்டிகா, இலங்கை வீரர் தரிண்டு மென்டிஸ் ஆகியோர் சேர்ந்து எவ்வாறு மேட்ச் பிக்சிங்கை செயல்படுத்துவது என ஆலோசனை நடத்துகின்றனர். இதை அல்ஜசீரா டிவியின் செய்தியாளர்கள் குழு ரகசிய கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளது.
 ஆடுகளத்தை சுழற் பந்து அல்லது வேகப்பந்து வீச்சா எந்த வகையில் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
 இலங்கை-இந்தியா போட்டியின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது.
 ஆடுகளம் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டு, சமன் செய்ய ரோலரும் பயன்படுத்தவில்லை. இதனால் அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது என மேலாளர் இன்டிகா அப்போது தெரிவித்துள்ளார். இந்தியா அந்த போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT