முகப்பு
செய்திகள்

லார்ட்ஸ் டி20: தன்னுடைய கடைசி சர்வதேச ஆட்டத்தில் கேப்டனாக விளையாடவுள்ள ஷாகித் அஃப்ரிடி!

கடந்த வருடத்தின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஃப்ரிடி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

லார்ட்ஸில் நாளை (மே 31) மேற்கிந்தியத் தீவுகள் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான கிரிக்கெட் மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச அந்தஸ்து அளித்துள்ளது. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்தின் இயன் மார்கன் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து உலக லெவன் அணிக்கு ஷாகித் அஃப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அஃப்ரிடி விளையாடவுள்ள கடைசி சர்வதேச ஆட்டம் இதுவாகும்.

கடந்த வருடத்தின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஃப்ரிடி. இந்நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் கேப்டன் பதவியுடன் அவர் விளையாடவுள்ளார்.

மார்கனுக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் சாம் கர்ரன், டைமல் மில்ஸ் ஆகிய வீரர்களும் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலக லெவன்:

ஷாகித் அஃப்ரிடி (கேப்டன்), தமிம் இக்பால், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், சந்தீப் லமிச்சனே, மிட்செல் மெக்லெனகன், சோயிப் மாலிக், திசாரா பெரேரா, லூக் ரோஞ்சி, அடில் ரஷித், முகமது ஷமி, சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன், டைமல் மில்ஸ்.  

மேற்கிந்தியத் தீவுகள் அணி: 

கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), ரயத் அம்ரிட், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆஸ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மேன் பவல், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சாமுவேல் பத்ரீ, மார்லன் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.