முகப்பு
செய்திகள்

குல்தீப் அபாரம்: இன்னிங்ஸ் வெற்றி விளிம்பில் இந்தியா

அதிகபட்சமாக போராடிய துவக்க வீரர் கீரன் பவல் அதிரடியாக ஆடி 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

Updated On : 6 அக்டோபர், 2018 at 2:21 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:29 PM

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

Advertisement

இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் 3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை மே.இ.தீவுகள் அணி 185 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

அதிகபட்சமாக போராடிய துவக்க வீரர் கீரன் பவல் அதிரடியாக ஆடி 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனால் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.