முகப்பு
செய்திகள்

ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் படுகாயம்

சர்ஃபிங் பயிற்சி பெறுவதற்காக சென்ற ஆஸி. முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் பலத்த காயமடைந்தார்.

Updated On : 9 அக்டோபர் 2018, 1:01 am IST
பகிர்:


சர்ஃபிங் பயிற்சி பெறுவதற்காக சென்ற ஆஸி. முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் பலத்த காயமடைந்தார்.
குயின்ஸ்லாந்தில் உள்ள வடக்கு ஸ்டார்ட்போர்க் தீவுகளில் மகன் ஜோஷ், மேத்யூ ஹெய்டன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சர்ஃபிங் பயிற்சி பெறுவதற்காகச் சென்றனர்.
அப்போது தவறி விழுந்து ஏற்பட்ட விபத்தில் தலை, கழுத்து, முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். 46 வயதான ஹெய்டன் 103 டெஸ்ட் ஆட்டங்களுக்கு பின் கடந்த 2009-இல் ஓய்வு பெற்றார். தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.