முகப்பு
செய்திகள்

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை! (விடியோ)

20 வயது ஹஸ்ரதுல்லா ஸஸாய், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயது ஹஸ்ரதுல்லா ஸஸாய், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோல அதிரடியாக விளையாடிப் பெயர் பெற்ற கிறிஸ் கெய்லேவின் முன்னிலையில் இதை நிகழ்த்தியுள்ளார் ஹஸ்ரதுல்லா. 

நேற்று, ஷார்ஜாவில் நடைபெற்ற பால்க் லெஜண்ட்ஸ் மற்றும் காபுல் ஸ்வானன் அணிகளுக்கு இடையிலான  ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பால்க் லெஜண்ட்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 10 சிக்ஸர் 2 பவுண்டரிகள் எடுத்தார். இந்தக் கடினமான இலக்கை எதிர்கொண்ட காபுல் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளது. 

Advertisement

காபுல் அணி சார்பாகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஹஸ்ரதுல்லா, 17 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

நான்காவது ஓவரை வீசிய அப்துல்லா மஸாரியின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார் ஹஸ்ரதுல்லா. அந்த ஓவரில் ஒரு ஒயிடையும் வீசினார் அப்துல்லா. இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் 37 ரன்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவ்ராஜ் சிங், ராஸ் ஒயிட்லே ஆகியோர் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்துள்ளார்கள். இந்தச் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா.

மேலும் அவர் 12 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் டி20 போட்டியில் 12 பந்துகளில் அரை சதமெடுத்த யுவ்ராஜ், கிறிஸ் கெயிலின் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments