சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை!
சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள்....
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவருடைய கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் சானியா மிர்சா. இதையடுத்து இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார் சோயிப் மாலிக்.
சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஆகிய இருவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Advertisement