செய்திகள்

டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் அலாஸ்டர் குக்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக 33 வயது குக் தற்போது அறிவிப்பு...

எழில்

இங்கிலாந்து தொடக்க வீரர் அலாஸ்டர் குக் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 4 டெஸ்டுகளில் 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் குக். அதில், அதிகபட்சமாக 29 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக 33 வயது குக் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

குக், 160 டெஸ்டுகளில் 12,254 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 32 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும். 2006-ல் இந்தியாவுக்கு எதிராக நாகபுரியில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமான குக், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறவுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 92 ஆட்டங்கள் விளையாடி 4154 ரன்கள் எடுத்துள்ளார். 4 டி20 ஆட்டங்களிலும் இடம்பெற்றுள்ளார். 2009க்குப் பிறகு டி20 மற்றும் 2014க்குப் பிறகு ஒருநாள் ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT