செய்திகள்

லேவர் கோப்பை: பெடரர்-ஜோகோவிச் இணை தோல்வி

தினமணி

லேவர் கோப்பை 2018 டென்னிஸ் போட்டியில் டீம் ஐரோப்பா அணி சார்பில் ஆடிய பெடரர்-ஜோகோவிச் இணை டீம் வேர்ல்ட் அணியான கெவின் ஆண்டர்சன்-ஜேக் சாக்கிடம் தோல்வியைத் தழுவியது.
 டென்னிஸ் ஜாம்பவானும், 11 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ஆஸி.யின் ராட்லேவர் பெயரில் சிகாகோவில் அணிகளுக்கு இடையிலான போட்டி சிகாகோவில் நடைபெறுகிறது. இதில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஆடுகின்றனர்.
 ஐரோப்பிய அணியில் உலகின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை வீரர்களான பெடரர்-ஜோகோவிச் இணை சேர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை உலக அணியின் கெவின் ஆண்டர்சன்-ஜேக் சாக் இணை 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
 பெடரர், ஜோகோவிச், வெரேவ், டிமிட்ரோவ், கோபின், எட்மண்ட் ஆகியோர் ஐரோப்பிய அணியில் உள்ளனர். சாக், நிக் கிரிஜியோஸ், ஜான் ஐஸ்நர், டியாபோ, ஆண்டர்சன், ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் உலக அணியில் இடம் பெற்றுள்ளனர். எனினும் டீம் வேர்ல்ட் அணியை காட்டிலும் 3-1 என்ற ஆட்டக்கணக்கில் டீம் ஐரோப்பா முன்னிலை பெற்றுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT