பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார் அளித்த அமெரிக்கப் பெண்
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்கப் பெண் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்...
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்கப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.
டெர் ஸ்பீகல் என்கிற ஜெர்மனிப் பத்திரிகைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா தரப்பில் அவரது வழக்கறிஞர் அளித்துள்ள பேட்டியில், கால்பந்துப் பிரபலம் ரொனால்டோ 2009-ம் ஆண்டு, லாஸ் வேகாஸில் உள்ள விடுதியில் கேத்ரினைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியே எதுவும் பேசக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணுக்கு ரொனால்டோ, ரூ. 2.72 கோடி அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெர்மனிப் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரொனால்டோவின் சட்ட நிபுணர் குழு கூறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கால்பந்து உலகில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளிலும் புகழ் பெற்றுள்ளார். அதே நேரத்தில் தேசிய அணிக்காக பெரிய அளவிலான போட்டியில் ஜொலிக்கவில்லை. இந்த வருட உலகக் கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. 33 வயதான ரொனால்டோ சிறப்பாக விளையாடினாலும் நாட்டுக்காக பெரிய வெற்றியை குவிக்க முடியவில்லை. ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடிய ரொனால்டோ, இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜுவென்டஸ் அணியில் சமீபத்தில் இணைந்தார். நான்கு வருட ஒப்பந்தமாக ரூ. 849 கோடிக்கு (123.24 மில்லியன் டாலர்) ரொனால்டோ, ஜுவென்டஸ் அணிக்கு மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement