செய்திகள்

ஐபிஎல்: சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு

DIN

இன்று நடைபெற்ற  சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரக்களை எடுத்துள்ளது.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும்  டி காக் களமிறங்கினர்.இதில் டி காக் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து எவின் லெவிஸ் களமிறங்கினார் இவர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

க்ருணல் பாண்டியா 3 பந்துகள் எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 67 ரன்களையும், ஹர்த்திக் பாண்டியா 23, போலார்ட் 13 ரன்களும் எடுத்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது.

சென்னை அணியில் தீபக் சஹார் மற்றும்  இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
156 ரன்களை  இலக்காக கொண்டு சென்னை அணி விளையாடிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT