முகப்பு
செய்திகள்

டி20 உலக சாம்பியன் மே.இ.தீவுகளை வீழ்த்துமா இந்தியா?: நாளை முதல் ஆட்டம்

டி20 ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணியும், நடப்பு உலக சாம்பியனுமான மே.இ.தீவுகளை எதிர்கொண்டு இந்தியா வீழ்த்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:


டி20 ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணியும், நடப்பு உலக சாம்பியனுமான மே.இ.தீவுகளை எதிர்கொண்டு இந்தியா வீழ்த்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்ட அதிர்ச்சியுடன் வெளியேறியது இந்தியா. இந்நிலையில் அடுத்த தொடராக மே.இ.தீவுகளுடன் தலா 3 டி20, ஒருநாள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா ஆடுகிறது.
உலகக் கோப்பை அதிர்ச்சி: இதற்காக விராட் கோலி தலைமையிலான அணி அண்மையில் பிசிசிஐ தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பையில் சரியாக ஆடவில்லை என விமர்சனத்துக்கு ஆளான தோனி, தான் ராணுவப் பயிற்சி பெறவுள்ளேன். ஆகையால், மே.இ.தீவுகள் தொடரில் நான் ஆடவில்லை என கூறி விட்டார். இதையடுத்து இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு முழு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
டெஸ்ட், ஐபிùல் ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்திய ரிஷப் பந்த், சர்வதேச டி20 ஆட்டங்களில் சோபிக்கவில்லை. இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆடினால், தனக்கான இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வார்.
புதுமுக வீரர்கள்: மேலும் இளம் வீரர்களான ஷிரேயஸ் ஐயர்,, க்ருணால் பாண்டியா, ஆகியோருடன் புதுமுகமாக இளம் வீரர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார், பந்துவீச்சில் ராகுல் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி, மணிஷ் பாண்டே,ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்,  உள்ளிட்டோரும், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ராகுல், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
டி20 ஆட்டங்களில் அனுபவம்: நடப்பு உலக சாம்பியன் மே.இ.தீவுகள் அணியில் கடந்த 2016 கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் சிக்ஸர் அடித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய கார்லோஸ் பிராத்வொயிட் மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி இளம் வீரர்கள் ஷிம்ரன் ஹெட்மயர், ஷெல்டன் காட்ரெல், எவின் லெவிஸ், கீமோ பால், நிக்கோலஸ் பூரண்ஸ ஓஷேன் தாமஸ் உள்ளிட்டோரும், மூத்த வீரர்கள் சுனில் நரைன், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 
டி20 ஆட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற மே.இ. தீவுகள் அணியை எதிர்கொள்வது இந்தியாவுக்கு பிரச்னையாக அமையும் எனத் தெரிகிறது.  
இந்திய-மே.இ.தீவுகள் நேருக்கு நேர்: இந்திய-மே.இ,தீவுகள் கடந்த 1948-இல் இருந்து ஆடி வருகின்றன. அனைத்து வகையான ஆட்டங்களையும் சேர்த்து 230-இல் மோதி உள்ளன. 1983 உலகக் கோப்பைக்கு பின்னர் தான் இரு அணிகள் இடையிலான மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை. 
இந்தியா-மே.இ.தீவுகள் நேருக்கு நேர்: மொத்தம் 11 டி20 ஆட்டங்கள், 127 ஒருநாள் ஆட்டங்கள், 96 டெஸ்ட்களில் இரு அணிகளும் மோதி உள்ளன. 


புளோரிடாவில் 2 ஆட்டங்கள்
அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் முதல் இரண்டு டி20 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. வரும் 2022-ஆம் ஆண்டு வரை தலா 2 டி20 ஆட்டங்களை வட அமெரிக்காவில் ஆட மே.இ.தீவுகள் திட்டமிட்டுள்ளது.  மீதமுள்ள ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் மே.இ.தீவுகளிலேயே நடைபெறுகின்றன.
புளோரிடா லாடர்ஹில் மைதானத்தில் மொத்தம் 20 ஆயிரம் பேர் அமர முடியும். ஏற்கெனவே நியூஸிலாந்து-இலங்கை, வங்கதேச அணிகள் டி20 ஆட்டங்களில் இங்கு ஆடியுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.