செய்திகள்

ராபின் சிங் முதல் கேரி கிரிஸ்டன் வரை: இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஆறு பேர்!

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பிரபல பயிற்சியாளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்... 

எழில்

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பிரபல பயிற்சியாளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். 

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். அவர் மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களின் பணிக்காலம் மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தோல்வியை அடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், மகளிரணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. ஜூலை 30-ஆம் தேதி பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ரவிசாஸ்திரி மற்றும் தற்போதுள்ள பயிற்சியாளர்கள் நேர்காணலில் நேரடியாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்

இந்நிலையில் இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கெடு தற்போது முடிந்துவிட்டது. இதையடுத்து ஆறு முக்கியப் பயிற்சியாளர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களின் பட்டியல்

1. ராபின் சிங்
2. லால்சந்த் ராஜ்புத்
3. கேரி கிரிஸ்டன்
4. மைக்கேல் ஹஸ்ஸன்
5. டாம் மூடி
6. மஹேலா ஜெயவர்தனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT