செய்திகள்

முதல் சர்வதேச விக்கெட்டிலேயே அபராதப் புள்ளியைப் பெற்றுள்ள நவ்தீப் சைனி: ஐசிசி நடவடிக்கை!

நவ்தீப் சைனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எந்தளவுக்கு அற்புதமாகத் தொடங்கியதோ அந்தளவுக்கு அதில் ஒரு சங்கடமும் நேர்ந்துவிட்டது...

எழில்

நவ்தீப் சைனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எந்தளவுக்கு அற்புதமாகத் தொடங்கியதோ அந்தளவுக்கு அதில் ஒரு சங்கடமும் நேர்ந்துவிட்டது. 

கடந்த சனியன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பூரானை 20 ரன்களில் வீழ்த்திய சைனி அடுத்தப் பந்தில் ஹெட்மையரை டக் அவுட் செய்தார். 

இந்நிலையில் பூரான் விக்கெட்டை வீழ்த்திய சைனி, ஆக்ரோஷமாக இரு கைகளையும் பெவிலியன் பக்கம் உயர்த்தி, அங்கே செல்லுமாறு பூரானுக்குச் சைகை செய்தார். இது ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் கள நடுவர்கள் சைனி மீது புகார் அளித்தார்கள். இதையடுத்து ஆட்ட நடுவர் ஜெஃப் குரோவ், சைனியின் செயலுக்கு ஓர் அபராதப் புள்ளி விதித்துள்ளார். 

இதன்மூலம், முதல் சர்வதேச விக்கெட்டிலேயே ஐசிசி விதிமுறைகளை மீறி அபராதப் புள்ளியைப் பெற்றுள்ளார் சைனி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT