செய்திகள்

கோலி உட்பட டாப் -3 காலி: மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா திணறல் பேட்டிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். 

கீமர் ரோச் சிறப்பாக பந்துவீச அகர்வால் மற்றும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ஆகியோர் முறையே 5 மற்றும் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் 9 ரன்களுக்கு கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி 25 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்திய அணியை இந்த சரிவில் இருந்து மீட்க தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் மற்றும் அஜின்கியா ரஹானே போராடி வருகின்றனர். சற்றுமுன் வரை, இந்திய அணி 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 31 ரன்களுடனும், ரஹானே 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

SCROLL FOR NEXT