செய்திகள்

புதுச்சேரி ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ள பிரபல வீரர்!

15 வருடங்களாக கர்நாடக ரஞ்சி அணியில் இடம்பெற்ற வினய் குமார் இந்த வருடம் முதல் புதுச்சேரி அணிக்காக விளையாடவுள்ளார். 

எழில்

15 வருடங்களாக கர்நாடக ரஞ்சி அணியில் இடம்பெற்ற வினய் குமார் இந்த வருடம் முதல் புதுச்சேரி அணிக்காக விளையாடவுள்ளார். 

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார், கர்நாடக அணி கேப்டனாகப் பதவி வகித்து இரு ரஞ்சி கோப்பைகளை 2013-14, 2014-15 ஆகிய வருடங்களில் வென்றார். இந்நிலையில் 35 வயது வினய் குமார் இந்த வருடம் புதுச்சேரி அணிக்காக விளையாடவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த வினய் குமார், கர்நாடக அணியில் இருந்த 15 வருட கால அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது. சில வருடங்கள் கழித்து, கர்நாடக அணிக்குத் திரும்பி என்னாலான எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT