செய்திகள்

16 இடங்களில் பச்சைக் குத்திக்கொண்ட விராட் கோலி ரசிகர்!

DIN

இந்திய கேப்டன் விராட் கோலியின் ரசிகர் ஒருவர் அவரது உடலில் 16 இடங்களில் கோலியைப் பிரதிபலித்து பச்சைக் குத்திக்கொண்டுள்ளார்.

ஆடுகளத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் போன்று ஒடிஸாவைச் சேர்ந்த அவரது ரசிகர் பின்டு பெஹ்ரா, தனது உடலில் கோலியைப் பிரதிபலிக்கும் விதமாக அவரது ஜெர்ஸி எண் 18 உள்பட 16 இடங்களில் பச்சைக் குத்திக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பின்டு பெஹ்ரா கூறுகையில்,

விராட் கோலியின் அபார ஆட்டத்திறன் காரணமாக நான் அவரது தீவிர ரசிகராக மாறிவிட்டேன். எனவே கோலி மீதான எனது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்த விரும்பினேன். கடந்த அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் ஆட்டத்தின் போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அச்சமயம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விராட் கோலியைச் சந்தித்தேன். அவர் என்னை ஆரத்தழுவினார், அது எனது வாழ்வின் மறக்க முடியாத தருணமாகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT