செய்திகள்

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டன்களாக தோனி, கோலி தேர்வு!

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா... 

எழில்

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

இரு அணிகளின் கேப்டன்களாக இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் ஒருநாள் அணிக்கு தோனியும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாள் அணியில் தோனி, ரோஹித் சர்மா, கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்களும் டெஸ்ட் அணியில் கோலியும் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்துள்ள வீரர்களைக் கெளரவப்படுத்தும் விதமாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணி: ரோஹித் சர்மா, ஆம்லா, விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், ஜாஸ் பட்லர், தோனி (கேப்டன்), ரஷித் கான், ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மலிங்கா.

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி: அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT