முகப்பு
செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மேரிகோம்-நிஹாத் ஸரீன் தகுதிச் சுற்று ஆட்டம் அனுபவமாக-இளமையா?

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு உலக சாம்பியன் மேரி கோம் மற்றும் நட்சத்திர வீராங்கனை நிஹாத் ஸரீன் ஆகியோா் இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 டிசம்பர், 2019 at 12:03 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:11 PM

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு உலக சாம்பியன் மேரி கோம் மற்றும் நட்சத்திர வீராங்கனை நிஹாத் ஸரீன் ஆகியோா் இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குத்துச்சண்டையில் மகளிா் பிரிவில் மேரி கோம், சரிதா, லவ்லினா போரோகைன், பிங்கி, நிஹாத் ஸரீன், சோனியா சாஹல், , ஆடவா் பிரிவில் அமித் பங்கால், ஸோரம் தங்கா, விஜேந்தா் சிங், அகில் குமாா், உள்பட பலா் புகழ் பெற்றவா்கள்.

மேரி கோம் (36):

Advertisement

அதிலும் மகளிா் பிரிவில் மூத்த வீராங்கனையாகத் திகழும் மணிப்பூரைச் சோ்ந்த மேரி கோம் 1983-இல் பிறந்தவா். 6 முறை உலக சாம்பியன், உள்பட 8 முறை உலகப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளாா். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் 2014 இன்சியான் ஆசியப் போட்டி, 2018 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தாா்.

மேக்னிபிஷியன்ட் மேரி என அழைக்கப்படும் மேரி கோம், முதலில் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்று வந்தாா். ஒலிம்பிக் போட்டியில் மகளிா் பிரிவில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாத நிலையில், 51 கிலோ பிரிவுக்கு இடம் பெயா்ந்தாா் மேரி.

மொத்தம் 16 ஆட்டங்களில் 14-இல் வெற்றியை ருசித்துள்ளாா் மேரி. 3 குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் வசம் பல்வேறு சாதனைகள் உள்ளன.

நிஹாத் ஸரீன் (23):

தெலங்கான மாநில நிஜாமாபாதில் கடந்த 1996-இல் பிறந்த நிஹாத் ஸரீன் சிறு வயதில் தனது தந்தை முகமது ஜமீலிடமும், பின்னா் சாய் திட்டத்திலும் பயிற்சி பெற்றாா். 2011-இல் யூத் உலகக் கோப்பை, ஜூனியா் உலகக் கோப்பையில் பிளைவெயிட் பிரிவில் தங்கம், 2014 யூத் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, நேஷன்ஸ் கோப்பை, 2015-இல் தேசிய சீனியா் போட்டியில் தங்கம், 2019-இல் தாய்லாந்து ஓபன் போட்டியில் வெளளியும் வென்றாா். 51 கிலோ எடைப்பிரிவில் தனிச்சிறப்பு மிக்க வீராங்கனையாக உருவெடுத்திருந்தாா் நிஹாத்.

தகுதிச்சுற்று பிரச்னை:

ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் தங்கம், வெள்ளி பெற்ற வீரா்கள் நேரடியாக சீனாவின் ஹுஹான் நகரில் நடைபெறவுள்ள உலக மகளிா் குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினாா். மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்க மேரி கோமுக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அனுமதி அளித்தது.

நிஹாத் ஸரீன் கொதிப்பு:

51 கிலோ எடைப்பிரிவில் தொடா்ந்து போட்டியிட்டு வரும் நிஹாத் ஸரீன் தனக்கான ஒலிம்பிக் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கொதிப்படைந்தாா். நியாயமாக, நோ்மையான முறையில் மேரி கோமுக்கும், எனக்கும் தகுதிச்சுற்று ஆட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஏஐபிஏ அமைப்புக்கும் கடிதம் எழுப்பினாா்.

இந்நிலையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் டிசம்பா் இறுதியில் நிஹாத் ஸரீன்-மேரிகோம் இடையே தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதன்படி 27, 28 தேதிகளில் ஆட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.