செய்திகள்

டி20 தொடர்: நியூஸிலாந்தின் பிரபல வீரர் விலகல்!

கடைசி ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக இடம்பெறாத மார்டின் கப்தில், டி20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார்...

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் ஆட்டத்தில் ராயுடு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் 4-1 என தொடரையும் கைப்பற்றி, நியூஸி மண்ணில் பெரிய வெற்றியை வசமாக்கியது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு தொடரில் இந்தியா ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து அணி 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி வெற்றி பெற்ற நிலையில் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்நிலையில் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக இடம்பெறாத மார்டின் கப்தில், டி20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார். 

புதனன்று வெலிங்டனில் டி20 தொடர் தொடங்குகிறது. இதிலிருந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 13 முதல் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கப்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT