செய்திகள்

2020 மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

DIN


2020 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது என ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் 2020 பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. சிட்னியில் மின்னொளியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும்-இந்தியாவும் மோதுகின்றன.
அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 5-இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், இறுதி ஆட்டம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. 
உலகின் 10 தலைசிறந்த அணிகள் மோதும் இப்போட்டி 6 நகரங்களில் 8 மைதானங்களில் நடக்கிறது. பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 16 முதல் 20ஆம் தேதி வரை பிரிஸ்பேன், அடிலெய்டில் நடக்கின்றன.
மெல்போர்னில் 92 ஆயிரம் பேர் முன்பு இறுதி ஆட்டம் நடைபெறுவது மகளிர் கிரிக்கெட்டுக்கு மேலும் உத்வேகமாக அமையும். போட்டிகளின் டிக்கெட் விலை, பொதுமக்களுக்கு ஏற்றவகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டம் உள்பட 23 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை வியாழக்கிழமை 21-ஆம் தேதி முதல் ஐசிசி அதிகாரபூர்வ இணையதளமான ற்20ஜ்ர்ழ்ப்க்ஸ்ரீன்ல்.ஸ்ரீர்ம்-இல் வாங்கலாம் என்றார் ரிச்சர்ட்ஸன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT