செய்திகள்

பரபரப்பான டி20 ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் வென்ற தமிழக அணி!

கடைசி விக்கெட்டை எடுக்கவிடாமல் காந்தி தமிழக அணிக்குக் கடுமையான நெருக்கடி அளித்தார்...

எழில்

தமிழ்நாடு 125/6 (சதுர்வேத் 34, வாஷிங்டன் 33, நாக்வஸ்வல்லா 3-11); குஜராத் 124 (காந்தி 68, வாஷிங்டன் 2-10)

சூரத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் குஜராத் அணியைத் தமிழக அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

டாஸ் வென்ற குஜராத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சதுர்வேத் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். குஜராத்தின் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசியதால் குஜராத் அணி 16.5 ஓவர்களில் 96 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தமிழக  அணி எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவானது. ஆனால் கடைசி விக்கெட்டை எடுக்கவிடாமல் காந்தி தமிழக அணிக்குக் கடுமையான நெருக்கடி அளித்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் கடைசி பேட்ஸ்மேன் படேலை ரன் எதுவுமின்றி ரன் அவுட் செய்து 1 ரன் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி. குஜராத் அணி, 19.5 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற காந்தி, 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் கடுமையாகப் போராடினார். தமிழக அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT