செய்திகள்

பந்துகளைச் சரியாகக் கூட்ட மறந்த நடுவர்: 7-வது பந்தில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்!

எழில்

டி20 ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பந்து கிடைத்தால் எந்த ஓர் அணியும் பேட்ஸ்மேனும் மகிழத்தான் செய்வார்கள்.

ஆனால் தவறாக வழங்கப்பட்ட அந்தக் கூடுதலான பந்தில் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால்?

இப்படியொரு சம்பவம் பிக் பாஷ் டி20 போட்டியில் நிகழ்ந்துள்ளது. பெர்த்தில் நேற்று சிட்னி சிக்ஸர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிட்னி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பெர்த் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் நடுவர் செய்த ஒரு தவறு நல்லவேளையாக பெரிய பாதிப்பை பெர்த் அணிக்கு ஏற்படுத்தவில்லை. பெர்த் தொடக்க வீரரான மைக்கேல் கிளிங்கர், 2-வது ஓவரின் கடைசிப் பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அது அந்த ஓவரில் வீசப்பட்ட 7-வது பந்து.

அந்த ஓவரில் பந்துகளை கள நடுவர் சரியாகக் கூட்டாததால் துரதிர்ஷ்டவசமாக 7-வது பந்தில் ஆட்டமிழந்தார் கிளிங்கர். ஆனால் விக்கெட் கீப்பர் பிடித்த அவருடைய கேட்ச் குறித்து 3-வது நடுவரிடம் ஆலோசனை கோரப்பட்டது. அப்போதுதான் பலரும் அது 7-வது பந்து என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் விதிமுறைப்படி கள நடுவர் பந்துகளைத் தவறாகக் கூட்டினாலும் அதில் 3-வது நடுவர் தலையிடக்கூடாது என்பதால் கேட்ச்சின் தன்மையை மட்டும் ஆராய்ந்துத் தீர்ப்பளித்தார் 3-வது நடுவர். இதனால் கூடுதலாக, தவறாக வீசப்பட்ட பந்தில் கிளிங்கர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை அளித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, விசாரணை நடத்தி தவறுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. 

எனினும் இதுபோன்ற தவறுகளை மூன்றாவது நடுவரைக் கொண்டு சரிசெய்யவேண்டும், இதுபோன்ற தவறுகளை அனுமதிக்கக் கூடாது என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT