செய்திகள்

இந்தியா, நியூஸிலாந்து இடையே நாளை முதல் ஒருநாள்

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. மேலும் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது. 

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் புதன்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது. 

நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, முகமது ஷமி, விஜய் ஷங்கர், ஷுப்மன் கில்.

நியூஸிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ட்ரெண்ட் போல்ட், டக் ப்ரேஸ்வல், காலின் டி கிராண்ட்ஹோம், லாகி ஃபெர்கூஸன், மார்டின் கப்டில், மேட் ஹென்ரி, டாம் லாதன் (விக்கெட் கீப்பர்), காலின் முன்ரோ, ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, ராஸ் டெய்லர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT